என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வண்ணாரப்பேட்டை விமான நிலையம்
நீங்கள் தேடியது "வண்ணாரப்பேட்டை விமான நிலையம்"
மெட்ரோ ரெயில் சேவை இரு மார்க்கத்திலும் தொடங்கியதாலும் இலவச சேலை வழங்கப்பட்டதாலும் மாநகர பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்து வருமானமும் குறைந்துள்ளது. #MetroTrain #TNBuses
சென்னை:
வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து நேற்று முன்தினம் தொடங்கியது.
வடசென்னை பயணிகள் சாலை மார்க்கத்தில் செல்லும்போது போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித்தான் தென்சென்னை பகுதிக்கு செல்ல வேண்டி இருந்தது.
மெட்ரோ ரெயில் அவசர பயணத்துக்கும், விரைவாக, சொகுசாக செல்லவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கடந்த 2 நாட்களாக மெட்ரோ ரெயில் போக்குவரத்து பொது மக்களின் வரவேற்புடன் செயல்பட்டு வருகிறது.
தொடக்க விழாவையொட்டி மெட்ரோ ரெயிலில் வண்ணாரப்பேட்டையில் இருந்து ஆலந்தூர் வரை சென்று வர இலவச பயணத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ ரெயிலில் முதல் பயணத்துக்கு கூட்டம் அலைமோதியது. இன்றும் இலவச பயணத்துக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது.
மாநகர பஸ்களில் திங்கட்கிழமைகளில் சராசரியாக ரூ.68 முதல் ரூ.70 லட்சம் வரை வருவாய் கிடைக்கும். விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.65 லட்சம் வரை வசூலாகும். ஆனால் மெட்ரோ ரெயில் தொடக்க நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநகர பஸ்களில் வசூல் ரூ.60 லட்சமாக குறைந்தது. ரூ.5 லட்சம் வசூல் குறைந்தது.
வார நாட்களில் 3,400 மாநகர பஸ்கள் 675 வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயில் தொடக்கத்தையொட்டி இலவச பயணம் அனுமதிக்கப்பட்டதால் கூட்டம் குறைந்தது.
நாளை முதல் கட்டணம் செலுத்திதான் பயணம் செய்ய வேண்டும். அதன் பிறகு மாநகர பஸ்களில் நிலைமை சீரடைந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #MetroTrain #TNBuses

மெட்ரோ ரெயில் சேவை இரு மார்க்கத்திலும் தொடங்கியதால் மாநகர பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்து வருமானமும் குறைந்துள்ளது. அதுவும் இலவச பயணத்தால் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநகர பஸ்களில் திங்கட்கிழமைகளில் சராசரியாக ரூ.68 முதல் ரூ.70 லட்சம் வரை வருவாய் கிடைக்கும். விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.65 லட்சம் வரை வசூலாகும். ஆனால் மெட்ரோ ரெயில் தொடக்க நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநகர பஸ்களில் வசூல் ரூ.60 லட்சமாக குறைந்தது. ரூ.5 லட்சம் வசூல் குறைந்தது.
வார நாட்களில் 3,400 மாநகர பஸ்கள் 675 வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயில் தொடக்கத்தையொட்டி இலவச பயணம் அனுமதிக்கப்பட்டதால் கூட்டம் குறைந்தது.
நாளை முதல் கட்டணம் செலுத்திதான் பயணம் செய்ய வேண்டும். அதன் பிறகு மாநகர பஸ்களில் நிலைமை சீரடைந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #MetroTrain #TNBuses
×

X